Wednesday, 26 February 2020

மூளை சலவை செய்யக்கூடிய நட்சத்திர ராசி லக்கின காரர்கள்.!!

பொதுவாக பிரச்சனை என்று வந்துவிட்டாலே பஞ்சாயத்து பண்ண ஒரு நடுநிலை ஆளை தேடுவோம்.

சிலர் பஞ்சாயத்து பன்றேன் னு இருக்குற பிரச்சனையை பெருசாக்கி விட்டுருவாங்க...

பிரச்சனை வராம இருக்கிறதுக்கும் சரி, வந்த பிரச்சனையை சரி செய்யுறதுக்கும் சரி... எல்லாத்துக்கும் பேசுற விதம் தான் முக்கியம்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர், சகுனி னு 2 கேரக்டர் இருக்கும்.

இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான்.
நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினால் கிருஷ்ணர்.
தவறான விஷயத்துக்கு பயன்படுத்தினால் சகுனி.

அந்த புத்தியை நமக்கு நிர்ணயிக்கும் கிரகம் தான் புதன்.

தனித்த புதன் கிருஷ்ணராகவும், பாவ கிரகங்களுடன் சேர்ந்த புதன் சகுனியாகவும் செயல்படும்.


ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திர காரர்களும் மிதுனம்  கன்னி லக்கின ராசி காரர்களும் லக்கினம் மற்றும் 2ம் இடத்தில் புதன் இருப்பவர்களும் ஜாதக அமைப்பை பொறுத்து க்ரிஷ்ணர் அல்லது சகுனியாக செயல்படுவார்கள்.

எவ்வாறு க்ரிஷ்ணரும் சகுனியும் ஒருவருக்கொருவர் brainwash செய்ய இயலாதோ, அது போல இந்த அமைப்பு உடையவர்களும் ஒருவருக்கொருவர் brainwash செய்ய இயலாது.

ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்களை கூட்டி சென்றால் பேசி சரி செய்து விடுவார்கள்.

மேலும் ஒருவரை தனக்கு ஏற்றவாறு இவர்களால் brainwash செய்ய இயலும்.

நேரடியாக ஒருவரை தாக்காமல் சூழ்ச்சி செய்து தாக்க கூடியவர்கள்.

இவர்களை தவிர மற்றவர்களுக்கு ஜாதகத்தில் எந்த இடத்தில் புதன் இருக்கிறதோ அது சார்ந்த இடத்தில் மட்டும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள்.

4ல் இருந்தால் அம்மாவிடமும்
5ல் இருந்தால் குழந்தைகளிடம்
7ல் இருந்தால் கணவன் / மனைவியிடம்
9ல் இருந்தால் அப்பாவிடம்
11ல் இருந்தால் நண்பர்களிடம் என புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment