எந்த கஷ்டம் வந்தாலும் சரி.... நாம் எல்லாரும் சொல்லும் வார்த்தை இதுதான். " போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணனனோ இப்போ அனுபவிக்கிறேன்."
சில புத்திசாலிகள் சொல்லுவது உண்டு " எல்லாம் எங்க அப்பா பண்ண பாவம். தாத்தா பண்ண பாவம். நான் அனுபவிக்கிறேன்" என்று....
முற்பிறவிக்கும் இப்பிறவிக்கும் சமந்தம் உண்டு என்றால் நிச்சயம் உண்டு.
சில பேரு யாருன்னே தெரியாது. ஆனா பேசுன 2 நிமிசத்துலயே பல வருஷம் பழகுண feel கிடைக்கும்.
100 பேரு இருக்குற இடத்துல நம்மகிட்ட மட்டும் வந்து ஏமாத்தி பணத்தை வாங்கிட்டு போவாங்க.
சில பேரால 10 பைசா கூட பிரயோஜனம் இருக்காது. ஆனா கூடவே வைச்சுக்கிட்டு இருப்போம்.
இதுலாம் முன் ஜென்ம தொடர்பு கடமை நன்றி கடன் எனலாம்.
சரி. சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிக்கையில் வந்த உண்மை சம்பவத்தை வைத்து இன்னும் தெளிவாக சொல்கிறேன்.
ஒரு தம்பதியினருக்கு மூளை வளர்ச்சி குறைவான குழந்தை பிறக்கிறது.
" நான் என்ன பாவம் செய்தேன். கடவுள் ஏன் எனக்கு இப்படி ஒரு குழந்தை தந்தார்" என தாய் அழுகிறாள்.
" நாம் பாவம் செய்யவில்லை. நாம் நல்லவர்கள். நம்மை தவிர வேறு யாரும் இப்படி ஒரு குழந்தையை பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என கடவுளுக்கு தெரிந்து உள்ளது. அதான் நம்மிடம் கடவுள் இந்த குழந்தையை கடவுள் கொடுத்து உள்ளார் " என்கிறார் கணவர்.
இருவரும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறார்கள். தன் பிள்ளை போல் பிறக்கும் பல குழந்தைகளுக்கு உதவுகிறார்கள்.
அதாவது
// நெருப்பு சுடும் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த, யாரோ ஒருவர் நெருப்பில் சுடு பட்டு ஆக வேண்டும் //
அதாவது கடவுள் ஒருவருக்கு வலியை தருகிறார். அழ வைக்கிறார். புலம்ப வைக்கிறார். பின்பு அவர் மூலமாகமே அந்த வலிக்கு மருந்தை உருவாக்குகிறார்.
*காமராஜர் படிக்கவில்லை. அவர் மூலமாக பல குழந்தைகள் படித்தனர்.
*எம்ஜிஆர் வறுமையில் பிறந்தார். அவர் மூலமாகவே வறுமையில் உள்ளவர்களுக்கு வசதிகள் கிடைத்தன.
*எனக்கு யாரும் இல்லை. அதான் எல்லாரையும் நேசிக்கிறேன்.
*நான் கஷ்டப்பட்டேன். அதான் அடுத்தவர்களுக்கு உதவுறேன்.
*எனக்கு கல்யாணம் ஆகாம ஒரு தங்கச்சி இருக்கா. எனக்கு அந்த வேதனை தெரியும்.
*எனக்கு அப்பா இல்லை. என் புள்ளைக்கு நல்ல அப்பாவா இருப்பேன்.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
நேற்று உயரம் குறைவு என சக மாணவர்களால் கிண்டல் செய்யப்பட்ட 9 வயது சிறுவன் தற்கொலை செய்ய வேண்டும் என்கிறான்.
இன்று உலகமே தன் தவறை உணர்ந்து உள்ளது. வலியை உணர்ந்து உள்ளது. தன் பிள்ளைகளுக்கு கேலி செய்ய கூடாது என கற்றுத்தர கடமைப்பட்டுள்ளது.
இதுதான் இறைவனின் படைப்பின் அர்த்தம்.
நாம் முன் ஜென்மத்தில் ஒருவற்கு கொடுத்த வலி வேதனையை இந்த ஜென்மத்தில் அனுபவிப்போம். அந்த வலியை உணரும் தருணம் நாமே அந்த வலிக்கு மருந்தாவோம்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment