Saturday, 22 February 2020

விதியை மதியால் வெல்ல முடியுமா ?? முடியும் என்றால் எவ்வாறு வெல்வது ??

" விதியை மதியால் வெல்ல முடியும்" என்றால் நம் அறிவை பயன்படுத்தி நவக்கிரகத்தையும் தோற்கடித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு எப்படிப்பட்ட அறிவு இருக்க வேண்டும். அது எப்போது வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதே நவக்கிரகங்கள் தான்.

" விதி" என்பது நம் ஜாதக அமைப்பு. அது நல்லதோ கெட்டதோ பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டது. அதை ஒன்றும் செய்ய இயலாது.

" மதி " என்றால் சந்திரன்.

அதாவது ஒருவனுக்கு "விதி" எனும் ஜாதக அமைப்பு சரி இல்லை என்றாலும், " மதி"  எனும் சந்திரனுக்கு அதாவது ராசிக்கு குரு சனி ராகு கேது சுக்கிரன் சாதகமாக வரும் சமயம் பார்த்து நாம் காய் நகர்த்தினால் வெற்றி பெற முடியும் என்பதாகும்.

உதாரணமாக ஒருவருக்கு விபத்து ஏற்படக்கூடிய கால கட்டம். அவர் அந்த சமயத்தில் ரத்த தானம் செய்து விட்டால் அவர் அந்த விபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கு விரயம் ஆக கூடிய கால கட்டம். அவர் தன் பணத்தை வேறு ஒருவர் பெயரில் மாற்றி விட்டால் விரயத்தில் இருந்து தப்பித்து விடலாம்.

ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற நிலை என்ற அமைப்பு. அவர் ஏற்கனவே திருமண ஆன ஒரு பெண் அல்லது வேறு ஜாதி மதம் அல்லது தன் தகுதிக்கு குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டால் பிரட்சனையின்றி வாழ்க்கை போகும்.

சரி... இதையெல்லாம் எவ்வித பக்தியும் இன்றி புண்ணியமும் இன்றி சாதித்து விடலாம் என்று எண்ணினால் நிச்சயம் அது நடக்காது. அதற்கு கடவுளின் கருணை வேண்டும்.


உதாரணமாக பாவங்கள் செய்தே வாழக்கூடிய ஒருவர் ரத்த தானம் செய்துவிட்டால் விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.

ஜோதிடர் சொல்லுவார். அப்போது அவர் அறிவு வேலை செய்யாது. ஒரு அலட்சியத்தில் சென்று விபத்தில் மாட்டிக்கொள்வார்.

விரயம் ஆக கூடாது என்று எண்ணி இன்னொருவர் பெயருக்கு பணத்தை மாற்றி முழுவதுமாக ஏமாந்து போவார்.

விதியை அறிவை பயன்படுத்தி நிச்சயம் வெல்ல முடியாது. ஆனால் பக்தியை பயன்படுத்தி புண்ணியத்தை பயன்படுத்தி நிச்சயம் வெல்ல முடியும். அதற்கான அறிவை நவகிரகங்கள் தக்க சமயத்தில்  தரும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment