Friday, 14 February 2020

காதல் மன்னர்கள் யார்.?? எந்த இடத்தில் வைத்து propose பண்ணா வெற்றி கிடைக்கும்.??

ஜாதகத்தில் காதல் என்றாலே அது சந்திரன் தான்.

சில பேருகிட்ட ஒரு மண்ணும் இருக்காது. ஆனால் வாயாலையே வடை சுட்டு பல பேரை கைல வைச்சு இருப்பாங்க. அதற்கு காரணம் சந்திரன் மற்றும் புதன்.

நிலா வானம் காற்று னு கவிதை சொல்றது. புதுசு புதுசா வித்தியாசமா காதல் romance பண்றது லாம் சந்திரன் வேலை.

உண்மையான லவ் அன்பு அக்கறை னா அது கடக ராசிக்கு காரங்க தான். ஆனால் பெரும்பாலும் அவங்க single ah தான் இருப்பாங்க. இல்லை னா லவ் அவங்களுக்கு ஒத்து வராது னு சொல்லலாம்.

வசனகர்த்தா சுஜாதா அவர்கள் சொன்னது போல....
செப்பு கலக்காத சுத்த தங்கம் லாம் புழக்கத்துக்கு இல்லாம தான் இருக்கும்.



கடக ராசி காரங்க 100 % perfect எதிர்பார்ப்பாங்க. அப்படி யாரும் இருக்க முடியாது அல்லவா...
ஒரு சின்ன தப்பை கூட அவர்களால் அட்ஜஸ்ட் பண்ண முடியாது. எமோஷனால் type. அதனாலையே பிரிஞ்சுறுவாங்க. உடனே அடுத்த ஆளை தேடி போயிருவாங்க. அப்புறம் அடுத்து. அப்புறம் அடுத்து னு பல தேடுதல்கள் இருக்கும். ஆனால் துரோகம் செய்ய மாட்டார்கள். பிரிஞ்சு போனாலும் வெறுத்தாலும் அவங்க மேல ஒரு care இருக்கும்.

But அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா உண்மையா இருந்தா, அவங்களை தவிர இந்த உலகத்தில் அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அவ்ளோ love and care உள்ளவங்க கடக ராசி காரங்க.

கடக ராசி காரங்க மட்டும் இல்லை. கடக லக்கினம், ஆயில்யம், புனர்ப்பூசம், பூசம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திர காரர்களும் தான். மேலும் லக்கினத்தில் சந்திரன், 7ம் இடத்தில் சந்திரன், 5ம் இடத்தில் சந்திரன் உள்ளவர்களும் தான்.

எந்த ராசி காரர்களுக்கு எந்த இடத்தில் வைத்து காதலை சொன்னால் சாதகமான பலன் கிடைக்கும் தெரியுமா...

மேஷம் சிம்மம் தனுசு :
Candle light வெளித்தில் propose பண்ணலாம்.

ரிஷபம் கன்னி மகரம் :
பார்க், beach னு மண் சார்ந்த இடத்தில் propse பண்ணலாம்.

மிதுனம் துலாம் கும்பம் :
மொட்டை மாடியில் propose பண்ணலாம்.

கடகம், விருட்சிகம், மீனம் :
கடல் ஆறு ஏறி குளம் போன்ற இடத்தில் propose பண்ணலாம்.

பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment