Sunday, 26 January 2020

தவறாக எழுதப்படும் ஜாதகங்கள்.!!

பொதுவாக என்னிடம் யார் ஜாதகம் பார்க்க வந்தாலும் முதலில் அவர்கள் ஜாதகம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு தான் பலன் சொல்ல ஆரம்பிப்பேன். ஏனெனில் " நீங்கள் சொல்வது போல ஏதும் இல்லையே"  என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மெனக்கிடுவேன்.

வழக்கம்போல ஒருவர் ஜாதகம் கொடுத்தார்.

ஜாதகர் தகவல்:
13.01.1990
10.40pm
Palayankottai.

இந்த தகவலை வைத்து நீங்கள் இணையத்திலோ அல்லது கம்ப்யூட்டரிலோ ஜாதகம் கணித்தால் இது போல தான் ஜாதகம் வரும்.


இரண்டு ஜாதகத்துக்கும் நிறைய different இருக்கு. நட்சத்திரமே மாறுகிறது. திசாபுத்தி மாறுகிறது.

சரி வழக்கம் போல நாமே பஞ்சாங்கம் வைத்து கணிப்போம். கொடுக்கப்பட்ட தகவலை வைத்து நாம் கணித்த ஜாதகம்.




பார்த்தீர்களா.??? 

வெறும் 3 மாத திசா இருப்புக்கு 16 வருடம் என்று போட்டு உள்ளார். அதாவது கழித்து போட வேண்டியதை கூட்டி போட்டுள்ளார்.
நட்சத்திர பாதம், திசாபுத்தி ஆகியவற்றை தவறாக எழுதி  ஒரு ஜோதிடர் ஜாதகம் கொடுத்துள்ளார். மேலும் கிரக வக்கிர நிலையை கூட mention செய்யவில்லை.

இந்த ஜாதகம் வைத்து எந்த ஜோசியரால் சரியான பலன் சொல்ல இயலும் ?? மேலும் இந்த ஜாதகம் வைத்து திருமண பொருத்தம் பார்த்தால், திருமண வாழ்க்கை என்னவாகும் ?

பலன் சொல்லும் ஜோதிடருக்கு ஜாதகம் சரியா என பார்க்க வேண்டிய அவசியமில்லை. கொடுக்கப்பட்ட ஜாதகத்திற்கு தான் பலன் சொல்லுவார். ஏனெனில் அவருக்கு அதற்கு மேல் தட்சணை கொடுக்கப்படுவது இல்லை.

இந்த ஜாதகம் எழுதியவர் பாளையங்கோட்டை யில் உள்ள ஒரு பிரபல ஜோதிடராம். எத்தனை பேருக்கு தவறாக ஜாதகம் எழுதி வாழ்க்கையை கெடுத்தாரோ ....

அந்த காலத்து ஜாதகம் பார்த்தீர்கள் என்றால் அதில் 1/2 1/4 னு லாம் இருக்கும். அதாவது ஒரு பாயிண்ட் கூட விடாமல் கணிப்பார்கள். ஆனால் இன்று அதையெல்லாம் தள்ளி விடுகிறார்கள்.

மேலும் பல ஜோதிடர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஜாதகம் கணிக்காமல் ஆண் காலம் பெண் காலம் என பார்த்து 10 முதல் 30 நிமிடம் வரை நேரத்தை மாற்றி கணிக்கின்றனர். இது மிக பெரிய தவறு. திசாபுத்தியே மாறும்.

அதாவது ஆண் காலத்தில் மட்டும்தான் ஆண் குழந்தைகள் தான் பிறக்குமாம். பெண் காலத்தில் மட்டும்தான் பெண் குழந்தைகள் பிறக்குமாம்.
நடைமுறையில் இது எவ்வாறு சாத்தியம். ஒரே நேரத்தில் ஆண் பெண் இரண்டு குழந்தைகளும் பிறக்க தானே செய்யும்.

மேலும் ஜாதகத்திற்கு மாந்தி கிரகமும் முக்கியமான ஒன்று. பல ஜோதிடர்கள் அதை கணிப்பது இல்லை.  எல்லா கிரகமும் நல்லா தான் இருக்கு. ஆனாலும் கஷ்டம். ஏன் னு பார்த்தா... அது மாந்தியின் வேலையா இருக்கும் சிலருக்கு.
சிலருக்கு மாந்தி யோகத்தையும் தரும்.

பல ஜாதகங்களுக்கு லக்கினமே தவறாக உள்ளது. லக்கினம் மிக மிக முக்கியமான ஒன்று. அது தான் அஸ்திவாரம். அதுவே தவறு என்றால் எல்லாமே மாறிவிடும்.

அன்று வந்த ஒருவருக்கு லக்கினம் ரிஷபம். ஆனால் ஜாதகத்தில் மகரம் என்று உள்ளது. சரி ஏதோ தவறில் மேஷம் அல்லது மிதுனம் என்று போட்டு இருந்தால் பரவாயில்லை. மகரம் எங்கே இருக்கு. ரிஷபம் எங்கே இருக்கு...

திருமணத்திற்கு லக்கின பொருத்தம் பார்ப்பார்கள். அதாவது 6, 8 வதாக வரும் லக்கினகாரர்கள் திருமண வாழ்க்கை சண்டை ஒற்றுமை குறைவு இருக்கும். தவறான லக்கினம் வைத்து பொருத்தம் பார்த்தால் திருமண வாழ்க்கை என்னவாகும்.

ஜாதகத்தை பொறுத்தவரை திருக்கணிதமா வாக்கியமா என்ற பஞ்சாயத்து உள்ளது.
கோவில்களில் வாக்கியமே பின்பற்றப்படுகிறது. மேலும் அனுபவ ரீதியாக பார்க்கும்போது வாக்கியமே சரியாக வருகிறது.

வாக்கிய முறையில் துல்லியமாக ஒரு point கூட விடாமல் திசாபுத்தி கணித்து மாந்தி,  கிரக வக்கிரம் லாம் mention பண்ணி எழுதப்பட்ட ஜாதகம் வைத்து மிக சரியான பலன்களை எல்லா ஜோதிடர்களாலும் சொல்ல இயலும். அது ஜாதகம் எழுதியவர் கையில் தான் இருக்கிறது.

ஜோதிடருக்கு வரும் நிறைய ஜாதகங்கள், நேரம் இன்மை, அவசரப்படுத்தும் மக்கள் என பல காரணங்களால் தவறு ஏற்பட்டு இருக்கலாம். இருப்பீனும் எழுதிய ஜாதகத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து கொடுப்பது ஜோதிடர் கடமை.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment